பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் இலங்கையின் பிரதமரும், இலங்கை பொதுசன முன்னணியின் தலைவருமான மகிந்த ராஜபக்ச மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘இன்று பிறந்தநாள் கொண்டாடும் எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வாழ்த்துகள். உங்களுக்கு வெற்றிகளையும் ஆரோக்கியத்தையும் இறைவன் வழங்க வேண்டுமென வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.