ETV Bharat / international

கிரீஸ் நாட்டில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சேதம் ஏதுமில்லை

author img

By

Published : Oct 9, 2022, 12:45 PM IST

கிரீஸ் நாட்டில் இன்று (அக்-9) காலை 5 புள்ளி ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Etv Bharatகிரீஸ் நாட்டில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சேதம் ஏதுமில்லை

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் மத்தியப்பகுதிகளில் இன்று (அக்-9)அதிகாலை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இன்று அதிகாலை 1 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கிரீஸ் தலைநகர் ஏதேன்ஸிற்கு மேற்கு-வடமேற்கில் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொரிந்து வளைகுடாவில் கடல் மட்டத்திலிருந்து 12.7 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஏதென்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜியோடைனமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் 15 நொடிகள் நீடித்தது. திடீரென்று சலசலக்கும் ஒலி கேட்டதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த அளவு நிலநடுக்கம் கிரேக்கத்தில் பொதுவான ஒன்றாகும். கிரீஸ் நாடு அடிக்கடி பூகம்பம் ஏற்படக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க:காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பிற்குக்காரணம் இந்திய நிறுவனமா?; விசாரணையைத் தொடங்கிய மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.