ஃபேர்பாக்ஸ் (விர்ஜினியா): ஜானி டெப் தொடர்ந்த அவரது மீதான அவதூறு வழக்கில் வெற்றி பெற்றதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் அம்பேர் ஹெர்ட் அவதூறு பரப்பியதற்கு அவருக்கு 15 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
ஹாலிவுட்டின் பல தவிர்க்க முடியாத, வித்தியாசமான படங்களில் நடித்தவர் நடிகர் ஜானி டெப். இவர் நடித்த, ‘பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்’, ஆலிஸ் இன் வொன்டர்லேண்ட்’ என பல படங்கள் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாகி தந்தது.
இந்நிலையில் ஜானி 1983ஆம் ஆண்டி அன்னி அல்லிசன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் திருமணமான இரண்டாம் ஆண்டில் விவாகரத்து செய்துகொண்டனர். பின்னர் ஜானி 2015ஆம் ஆண்டு பிரபல நடிகை அம்பேர் ஹெர்டை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.
அம்பேர் ஹெர்டும், ஜானியை 2017ஆம் ஆண்டில் விவகாரத்து செய்தார். பின்னர் ஆம்பேர் ‘வாஷிங்டன் போஸ்ட்’ என்ற பத்திரிகையில் எழுதிய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றிய கட்டுரையில் ஜானியின் பெயரை குறிப்பிடாமல் அவர் மீது குற்றஞ்சாட்டும் வகையில் கருத்துக்களை கூறியிருந்தார்.
இதன்பின்னர் ஜானி டெப்பின் ஹாலிவுட் கேரியர் சுக்கு நூறாக உடைந்தது. பல படங்கள் அவரின் கையை விட்டுச் சென்றன. இதனையடுத்து 2018ஆம் ஆண்டு அம்பேர் மீது ஜானி டெப் அவதூறு வழக்கு ஒன்றை பதிவுச்செய்தார். அதில் அவதூறு பரப்பியதற்கு அபாரத தொகையும் கேட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த வழக்கிற்கான விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தன. இதனையடுத்து ஜானி சமர்ப்பித்த ஆதாரங்கள் உண்மை என நிருபிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (ஜூன் 1) வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜானி சமர்ப்பித்த ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஆம்பேர் அவதூறு பரப்பியது உறுதி செய்யப்பட்டது. மேலும் ஆம்பேருக்கு 15 மில்லியன் டாலர் தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து விசாரணையிலும் பங்கேற்ற ஜானி டெப் இறுதி தீர்ப்பின் போது நீதிமன்றத்திற்கு வரவில்லை. இதனை ஜானியின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடிவருகின்றனர்.
இதையும் படிங்க:ஜானி டெப் மீது ஆம்பர் ஹெர்ட் வழக்கு: எலான் மஸ்க் கருத்து என்ன தெரியுமா?