ETV Bharat / international

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அச்சம்..!

Japan Issues Tsunami Warnings: ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஜப்பான் வாழ் இந்தியர்களுக்கான இந்தியத் தூதரகம் உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை அறிவித்துள்ளது.

issued Japan tsunami warning because of Powerful earthquake
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
author img

By PTI

Published : Jan 1, 2024, 1:55 PM IST

Updated : Jan 1, 2024, 5:08 PM IST

டோக்கியோ (ஜப்பான்): ஜப்பானில் மேற்கு பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 வரை பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கோயாமா, இஷிகாவா, நிகாடா, ஹயோகோ பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கடலில் ஏற்படும் ஆக்கிரோஷமான அலைகளால் மக்களும் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம், இஷிகாவா அருகில் உள்ள மாகாணங்களில் கடற்கரைப் பகுதிகளில் மாலை 4 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அது ரிக்டர் அளவுகோலில் 7.6 வரை பதிவாகியுள்ளது எனத் தெரிவித்து உள்ளது.

இதனை அடுத்து இஷிகாவிற்கு தீவிர சுனாமி எச்சரிக்கையும், ஹொங்சு தீவின் மேற்கு பகுதி மற்றும் சில இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து, ஜப்பான் ஒளிபரப்பு நிறுவனமான (Japanese public broadcaster) என்ஹெச்கே டிவி (NHK TV) 5 மீட்டருக்கு மேல் கடல் அலைகள் எழும்பக் கூடும் என்பதால் மக்கள் தாழ்வான இடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடம் அல்லது உயரமான கட்டிடங்களுக்குச் செல்ல வேண்டும் என தகவல் வெளியிட்டு உள்ளது.

  • Tsunami now in Toyama Prefecture!
    Higher tsunami is expected in Ishikawa Prefecture. Please be safe 🙏🏻 pic.twitter.com/nEkIw97noq

    — MJ 🏎️🏐 // hiatus (@MagandangHapon) January 1, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

புத்தாண்டின் முதல் நாளிலேயே ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதும், சுனாமி அச்சம் நிலவுவதும் அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி காரணமாக அனு உலை சேதமடைந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  • Embassy has set up an emergency control room for anyone to contact in connection with the Earthquake and Tsunami on January I, 2024. The following Emergency numbers and email IDs may be contacted for any assistance. pic.twitter.com/oMkvbbJKEh

    — India in Japanインド大使館 (@IndianEmbTokyo) January 1, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், ஜப்பான் வாழ் இந்தியர்களுக்கான இந்திய தூதரகம் அவரச உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. அதில், “ஜனவரி 1ஆம் தேதி சுனாமி மற்றும் நிலநடுக்கம் தொடர்பாக அவரச உதவிகளுக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறுவுறுத்தி உள்ளது. அவைகளான, 81-80-3930-1715, 81-70-1492-0049, 81-80-3214-4734, 81-80-6229-5382, 81-80-3214-4722 ஆகிய எண்களும், sscons.tokyo@mea.gov.in, offfseco.tokyo@mea.gov.in” என்ற மின்னஞ்சல் முகவரியையும் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கருந்துளை ஆய்வுக்கான 'எக்ஸ்போசாட்' செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்!

Last Updated : Jan 1, 2024, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.