வாசிங்டன்: நீண்டநாள் எதிர்பார்ப்புகளுக்கு பிறகு உலகம் முழுவதும் பிரபலமான அவதார் படத்தின் அடுத்த பாகத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது. 20th சென்சூரி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அவதார்; தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. மேலும் டிசம்பர் 16 முதல் உலகமெங்கும் பல மொழிகளில் திரைப்படம் வெளியாகிறது.
2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து இந்திய மொழிகளிலும் பெருமளவு வெற்றி பெற்றது. மேலும் தமிழ்நாட்டின் 90s கிட்ஸ்களின் பிரம்மாண்டமான ஃபேவரைட் திரைபடமாக இருந்தது. தற்போது 13 ஆண்டுகள் கழித்து உலக ரசிகர்களின் பார்வைக்கு விருந்தளிக்க உள்ளது. மேலும் இந்த பாகத்தில் மனிதர்களுக்கும், ஏவா இன மக்களுக்கமான போர் மூண்டதோடு முடிக்கப்பட்ட படமானது இதில் சுல்லி குடும்பத்தின் கதையாக தொடர உள்ளது.
வெளியான டீசர் வெறும் ஒரு நிமிடம் 40 நொடிகள் மட்டுமே உள்ள நிலையில் அதில் வந்த காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகமாக தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவதார் படத்தில் சோயோ சால்டானா, சாம் வொர்திங்டன், ஸ்டீபன் லாங் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். 20th சென்சூரி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஜேம்ஸ் காம்ரூன் இயக்கத்தில் அவதார்; தி வே ஆஃப் வாட்டர் டிசம்பர் 16 முதல் ஆங்கிலம், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க:'டான்' படத்திற்கு 'யூ' சான்றிதழ்