வாஷிங்க்டன்: நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் சமீபத்தில் அவரது அழகான செல்ஃபியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து 'பால்ட் இஸ் பியூட்டிஃபுல் டே' என பால்ட் தினத்தை கொண்டாடியுள்ளார். ஜடா தனது இன்ஸ்டாகிராமில், "முடி இல்லாத என் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மகிழ்ச்சியான வழுக்கை தின வாழ்த்து'' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜடாவின் கணவர் வில் ஸ்மித் ஆறு மாதங்களுக்கு முன்பு கிறிஸ் ராக்கை 2022ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விழாவில் ஜடாவின் தலையை கேலி செய்ததற்காக அறைந்தார். ஜடா அவரது முடி உதிர்தல் பிரச்னையால் சிக்கி அவரது போராட்டம் குறித்து 2018இல் அவரது ஃபேஸ்புக் வாட்ச் நிகழ்ச்சியான 'ரெட் டேபிள் டாக்' இல் முதன்முதலில் பேசினார். அந்த நேரத்தில், "எனக்கு முடி உதிர்தலில் சிக்கல் உள்ளது. இது முதலில் தொடங்கியபோது பயமாக இருந்தது. நான் ஒரு நாள் குளித்துக்கொண்டிருந்தேன், என் கைநிறைய முடிகள் வந்தன, 'கடவுளே எனக்கு வழுக்கை வருகிறதா? என எண்ணி பயந்தேன்’ '' எனக் கூறினார்.
இருப்பினும் ஜடா அதிலிருந்து வெளிவந்து, அவரது மகளான தலையை மொட்டையடித்த வில்லோ ஸ்மித்தால் ஈர்க்கப்பட்டு, ஜடா 2021ஆம் ஆண்டில் வழுக்கையைத் தழுவி பொதுவெளியில் பேசத்தொடங்கினார். அவை மீண்டும் வளர ஸ்டீராய்டு ஷாட்களுடன் பரிசோதனையும் செய்துகொண்டார்.
இந்நிலையில் தற்போது ஜடா அவரது நிகழ்ச்சியில் கிறிஸ் ராக் மற்றும் வில் ஸ்மித் ஆகியோரை அழைத்துப்பேச வைக்க உள்ளதாகவும், இருவருக்குமிடையில் சமரசம் செய்ய முயற்சி எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மீண்டும் வில் ஸ்மித்தை வம்பிழுத்த ஸ்டாண்ட்அப் காமெடிக் கலைஞர் கிரிஸ் ராக்