டெல் அவிவ்:
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலிய அரசு போர் அறிவித்தது. ஹமாஸின் திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராணுவத்திற்கு இஸ்ரேல் அரசு பச்சைக்கொடி காட்டி உள்ளது. ராணுவம் தெற்குபகுதிகளில் உள்ள காசா பகுதியில் குண்டு வீச்சை தீவிரப்படுத்தவும், போராடி வருவதாக கூறப்படுகிறது. இரு தரப்பிலும் இதுவரை 1,100 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
ஹமாஸ் காசா பகுதியில் ஊடுருவி 40 மணி நேரத்திற்கு மேலாகியும், இஸ்ரேலிய படைகள் சில பகுதிகளில் பதுங்கி இருக்கும் போராளிகளுடன் போரிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் மட்டும் 700 பேர் இறந்து உள்ளதாக சொல்லப்படுகிறது. காசா பகுதியில் 400 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலிய தளங்களை ஹமாஸிடம் இருந்து மீட்பதற்காக சிறப்பு படைகளை கொண்டு வந்ததாக கூறியது. முன்னதாக, பயங்கரவாதிகளின் தாக்குதலில் இருந்து இஸ்ரேலிய போலீசாரால் சில காட்சிகள் வெளியானது. இதுவரை வான்வெளி தாக்குதல் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்துமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
ஹாமாஸ் பயங்கரவாத குழுவால் சிறைபிடிக்கப்பட்டவர்களில் பெண்கள், முதியவர்கள் குழந்தைகள் பெரும்பாலனவர்கள் என்றும் இஸ்ரேல் மற்றும் பிறநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் இஸ்ரேல் ராணும் தெரிவித்து உள்ளது. நேற்று 1000க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்டு உள்ளது.
மேலும், டெக்னோ இசை விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் இருந்து 260 சடலங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:இஸ்ரேல் பாலஸ்தீன போர் தாக்குதல் - உலகத் தலைவர்கள் கருத்து!