அமெரிக்காவின் மத்திய உளவு முகமையில் (சிஐஏ) தொழில்நுட்ப பிரிவுக்கு முதல் முறையாக தலைவர் பதவியை (CTO) அறிவித்துள்ளது. மேலும், அப்பதவி இந்திய வம்சவாளியை சேர்ந்த நந்த் முல்சந்தினிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிஐஏ இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,"சிஏஐ பணிக்கு தேவைப்படும் அதிநவீன கண்டுபிடிப்புகளை மேம்படுத்துதல் மற்றும் வருங்காலங்களில் பல புதிய முயற்சிகளை நோக்கி செல்வதையும் முல்சந்தினி உறுதிசெய்வார்.
தற்போது அதிநவீன தொழில்நுட்பம் தொடர்பாக கவனம் செலுத்த சிஐஏ முடிவெடுத்துள்ளதால், அதற்கு இந்த புதிய சிடிஓ பதவி மிகவும் இன்றியமையாதாகும். முல்சந்தினி எங்கள் குழுவுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த புதிய பொறுப்பை அவர் தனது அனுபவத்தின் மூலம் சிறப்பிப்பார்" என குறிப்பிட்டுள்ளார்.
1987ஆம் ஆண்டு டெல்லியில் தனது பள்ளிப்படிப்பை முடிந்த நந்த் முல்சந்தினி, மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு, கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறையில் இளநிலை பட்டத்தை கோர்னெல் பல்கலைகழகத்திலும், அறிவியல் துறையில் முதுகலை பட்டத்தை ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். தொடர்ந்து, புகழ்பெற்ற ஹார்வெர்ட் பல்கலைக்கழக்கத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து முல்சந்தினி கூறுகையில், "இந்த பணியை பெறுவதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும். சிஐஏ குழு இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்" என்றார். கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்கவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பல்வேறு ஸ்ட்ராட் அப் நிறுவனங்களை தொடங்கியுள்ள நந்த், அமெரிக்காவின் பாதுகாப்பு துறையிலும் சிறந்த அனுபவத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ட்விட்டர் பழசு... கோகோ கோலா புதுசு! எலான் மஸ்க்கின் நெக்ஸ்ட் பிளான்..!