பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றைப் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காபை 6-1,6-3 என்ற நேர்செட் கணக்கில் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பல்வேறு பிரிவுகளில் பல வீரர், வீராங்கனைகள் போட்டியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக்குடன் அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயதே ஆன கோகோ காப் இறுதிப்போட்டியில் மோதினார்.
போட்டியின் தொடக்கம் முதலே முன்னிலை வகித்த இகா முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 3-6 என்ற கணக்கில் எளிமையாக கைப்பற்றி போட்டியில் வென்றார்.
இதன் மூலம் போலந்தைச் சேர்ந்த இகா இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாராலிம்பிக் வீரர்களுக்கு விசா மறுப்பு!