மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள பிரபல தண்ணீர் பூங்காவில் ஹெலிகாப்டர் சாகசத்தில் சுற்றுலாப் பயணிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு ஹெலிகாப்டர் வான் நோக்கி சென்ற போது, தரையிறங்க இருந்த மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் ஹெலிகாப்டர் நிலை குழைந்து அருகில் உள்ள மணல் திட்டல் விழுந்து நொறுங்கியது.
மணல் திட்டில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் பயணித்த 4 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 சுற்றுலாப் பயணிகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான மற்றொரு ஹெலிகாப்டரில் விண்ட் ஷீல்டு எனப்படும் கண்ணாடி உடைந்து பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மனிதத் தவறுகளால் விபத்து ஏற்பட்டதா அல்லது சிக்னல் காரணமா என விசாரணை நடத்தி வருவதாக ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலம் நிலவி வரும் நிலையில், கோடை விடுமுறையைக் கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: புத்த மதத்தை அழிக்க சீனா முயற்சி: தலாய்லாமா பகீர் குற்றச்சாட்டு!