கிரீஸ்: கிரீஸ் நாட்டில் ஏதேன்சில் இருந்து 350 பயணிகளுடன் தெஸ்ஸாலொனிகி நோக்கி ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் லரிசா நகரின் தெம்பி பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு ரயில் உடன் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் நொருங்கின.
பல பெட்டிகள் தடம் புரண்டு கீழே விழுந்து தீ பற்றி எரிந்தன. இந்த கோர விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்ததாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதனிடையே தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற மீட்புக்குழுவினர் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 190-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மீட்புக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் துப்புரவு பணியாளரை தாக்கிய இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்டார்