ETV Bharat / international

Google ஏன் சாம்பல் நிறத்தில் உள்ளது..? - பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத் மகாராணி மறைவுக்கு கூகுள் நிறுவனம் டூடுல் மூலம் அஞ்சலி செலுத்துகிறது

Etv Bharatசாம்பல் நிறமாக கூகுள் லோகோ -இரண்டாம் எலிசபெத்திற்கு அஞ்சலி

author img

By

Published : Sep 11, 2022, 7:20 AM IST

Updated : Sep 11, 2022, 7:50 AM IST

இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் வியாழக் கிழமை (செப்- 8) உடல்நலக் குறைவால் காலமானார். 2ஆம் எலிசபெத் அந்நாட்டில் சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி என்ற பெருமைக்குரியவர். இறுதி சடங்குகள் ஒருவார நடைபெறுவிருக்கிறது. அவரது மறைவைத் தொடர்ந்து மகன் சார்லஸ் புதிய மன்னராக பதவியேற்றார். இவரது மறைவுக்கு பல உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் எலிசபெத்தின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி லோகோவை சாம்பல் நிறத்தில் மாற்றியுள்ளது.

இதுகுறித்து கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில், "இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு, இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உறுதியான தலைமைத்துவமும், பொதுச் சேவையும் வாழ்நாள் முழுவதும் நிலையாக இருக்கும். அவர் போன்ற தலைவரை அனைவரும் நினைவு கூர்வோம்" என்று பதிவிட்டார். அதன்பின் லோகோ சாம்பல் நிறத்திற்கு மாற்றப்பட்டது.

  • Sending our deepest condolences to the people of the UK and around the world mourning the passing of Queen Elizabeth II. Her steadfast leadership and public service have been a constant through many of our lifetimes. She will be missed.

    — Sundar Pichai (@sundarpichai) September 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கூகுள் நிறுவனம் பொதுவாக சாம்பல் நிற லோகோவை முக்கிய தலைவர்களின் நினைவு தினத்திற்கும், அமெரிக்க ராணுவ வீரர்கள் வீர மரண தினத்திற்கும் பயன்படுத்துகிறது. முன்னதாக 2018ஆம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மறைந்த போது கூகுள் நிறுவனம் தனது லோகோவை சாம்பல் நிறமாக மாற்றியது குறிப்பிடத்தக்கது. 2ஆம் எலிசபெத் இறுதிசடங்கு நாளை (செப்-12) காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது.

இதையும் படிங்க:இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார் அமெரிக்க அதிபர்

Last Updated : Sep 11, 2022, 7:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.