சான் பிரான்சிஸ்கோ(அமெரிக்கா): நோய்வாய்ப்பட்ட குழந்தையின் நிர்வாண புகைப்படங்களை எடுத்து, கூகுள் போட்டோஸ் செயலியில் சேமித்ததற்காக, தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) அந்த குழந்தையின் பெற்றோரின் கணக்குகளை தடை செய்துள்ளது. மேலும் இது குறித்து விளக்கமளித்த அக்குழந்தையின் தந்தை, அவரது குறுநடை போடும் குழந்தையின் இடுப்பில் தொற்று ஏற்பட்டுள்ளதை புகைப்படம் எடுத்ததாகவும், அந்த புகைப்படத்தைதான கூகுள் நிறுவனம் துஷ்பிரயோகம் (CSAM) என்று தடை செய்துள்ளது எனக் கூறினார். இது குறித்து வெர்ஜ் என்னும் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் அவரது கணக்குகளை முடக்கிவிட்டு, காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்தில் (NCMEC) அவர் மீது புகார் அறிக்கையைத் தாக்கல் செய்தது. இதனால் அந்த தந்தை மீது போலீஸ் விசாரணை நடத்தவும் பரிந்துரைத்தது.
கூகுள் அதன் வாடிக்கையாளர்களின் போனில் உள்ள டிஜிட்டல் லைப்ரரியின் ஒரு பகுதியாக மாறியதிலிருந்து, அவர்களின் தனிப்பட்ட ஃபோல்டரிலோ அல்லது கிளவுட் சேமிப்பகத்திலோ, பாலியல் சம்பந்தப்பட்ட புகைப்படம் மற்றும் அவர்களின் சொந்த புகைப்படம் ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை கண்டறியமுடியாமல் கூகுள் திணறி வருகிறது.
மேற்கூறிய இந்தச் சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்ததாக கூறப்படுகிறது. கரோனா தொற்றுநோய் காரணமாக சில மருத்துவமனைகள் மூடியிருந்தன.
அதனால் அக்குழந்தையின் தந்தை மார்க் அளித்த அறிக்கையின்படி, ’அவரது குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் வீக்கம் இருந்ததால், ஒரு செவிலியரின் வேண்டுகோளின் பேரில் வீடியோ ஆலோசனைக்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதியின் படங்களை செவிலியருக்கு அனுப்பினார், அத்தந்தை. இதனையடுத்து நோய்த்தொற்றைக் குணப்படுத்தும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மருத்துவர் பரிந்துரைத்தார். புகைப்படங்களை எடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, மார்க்கிற்கு Google - நிறுவனத்திடம் இருந்து ஒரு அறிவிப்பு கிடைத்தது.
அதில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் உடைய போட்டோக்களின் காரணமாக அவரது கணக்குகள் தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இது Googleஇன் கொள்கைகளை கடுமையாக மீறுவதாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் இருக்கலாம்’ எனவும் கூறியிருந்தது.
ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் ரெடிட் உள்ளிட்ட பல இணைய நிறுவனங்களைப் போலவே, அறியப்பட்ட CSAM உடன் பொருத்தங்களைக் கண்டறிய பதிவேற்றப்பட்ட படங்களை ஸ்கேன் செய்வதற்கு மைக்ரோசாப்டின் ஃபோட்டோடிஎன்ஏ-வுடன் ஹேஷ் பொருத்தத்தை Google பயன்படுத்துகிறது. 2012ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றவாளி மற்றும் ஒரு இளம் பெண்ணின் படங்களை அனுப்ப ஜிமெயிலைப் பயன்படுத்திய ஒரு நபர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட 8 யூடியூப் சேனல்கள் முடக்கம்