ஃப்ரான்க்புட்: ஜெர்மனியின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் இன்று (செப்டம்பர் 2) பல்வேறு வழிதடங்களில் 800 விமானங்களை ரத்து செய்துள்ளது. இந்த அறிவிப்பால் 1,30,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் விமானிகள் சங்கம் ஊதிய உயர்வு கேட்டு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை நிறுவனம் ஏற்றுக் கொள்ளாததால் விமானிகள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விமானங்கள் ரத்தாகி உள்ளன.
இதுகுறித்து லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் மனித வளங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர் மைக்கேல் நிக்மேன் கூறுகையில், கரோனா ஊரடங்கிற்கு பின் 18 மாதங்களில் 2 முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக விமானிகளுக்கு ஊதிய உத்தரவாத ஒப்பந்ததமும் போடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வேலைநிறுத்தத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. முன்பதிவு செய்திருந்த விமான பயணிகளிடம் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக லக்ஷ்மன் நரசிம்மன் நியமனம்