ETV Bharat / international

துருக்கியில் தொடரும் அவலம்! மீண்டும் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை உயர்வு! - Syria news in tamil

துருக்கியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதுவரை 47 ஆயிரத்து 244 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் - 47,000ஐ தாண்டிய உயிரிழப்பு!

author img

By

Published : Feb 24, 2023, 7:31 AM IST

அங்காரா: கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி தெற்கு துருக்கியில் 7.8 ஆக ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் துருக்கியின் 10 நகரங்கள் மட்டுமல்லாமல், அண்டை நாடுகளான லெபானன் மற்றும் சிரியா ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்புப்படை வீரர்கள் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று (பிப்.23) மாலை 6.53 மணிக்கு தெற்கு துருக்கி மாகாணத்தின் சிரியா எல்லையான ஹத்தாயில் நகரில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5 என்ற அளவில் நில நடுக்கம் பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது 9.67 கிலோ மீட்டர் ஆழத்தில் டெப்னே மாகாணத்தில் உணரப்பட்டதாக பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த 21ஆம் தேதி டெப்னே மாகாணத்தில் 6.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு கூறுகையில், “துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 43,556 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அதேநேரம் துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 244 ஆக கணக்கிடப்பட்டு உள்ளது. ஹதாய் மாகாணத்தில் நிலநடுக்கத்தால் உருக்குலைந்த 2 கட்டடங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.

இரு நாடுகளிலும் சேர்த்து குறைந்தபட்சம் ஒரு லட்சத்து 64 ஆயிரம் கட்டடங்கள் இடிந்திருக்கலாம் என்று துருக்கியின் சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கல் துறை அமைச்சர் முரட் குரூம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "பாதிக்கப்பட்ட சிரியா மக்கள் தற்காலிக கூடாரங்கள் மற்றும் கார்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்" என்றார். துருக்கிக்கு சவுதி அரேபியா மற்றும் எகிப்து போன்ற அரேபிய நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இதையும் படிங்க: துருக்கி, சிரியாவை துரத்தும் அவலம் - மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.