காத்மாண்டு: நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் நேற்றிரவு (ஏப். 24) பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதியதில் நான்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் உள்பட 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், "இந்திய சுற்றுலாப் பயணிகள் நான்கு பேர் காரில் பொக்காராவுக்குச் சென்றுவிட்டு காத்மாண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, பிரித்வி நெடுஞ்சாலையில் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிமல்சந்திர அகர்வால் (40), சாதனா அகர்வால் (35), சந்தியா அகர்வால் (40), ராகேஷ் அகர்வால் (55) ஆகிய நான்கு பேரும் உயிரிழந்தனர். அவர்களுடன் சென்ற நேபாளத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் தில் பகதூர் பாஸ்நெட் (36) என்பவரும் உயிரிழந்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் மலைப்பாதைகளில் சாலை விபத்துகள் அதிகமாகிவிட்டன. பெரும்பாலான சாலைகள் குறுகியதாக உள்ளதே விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சுவரில் மோதி இளைஞர்கள் உயிரிழப்பு