ஈரான்: இசே நகரில் கடந்த சில நாள்களாக ஹிஜாப் அணிவதற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. நேற்று (நவம்பர் 16) அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், போராட்டகாரர்கள், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது துப்பாகிச் சூடு நடத்தி விட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் 45 வயது மதிக்கத்தக்க பெண், 9 வயது சிறுமி, மூன்று இளைஞர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் சிலர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால் இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தாக்குதலின் உண்மை காரணங்கள் குறித்து அந்நாட்டு அரசு தரப்பில் எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்தியதை கண்டித்து, போராட்டகாரர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க காவலர்களும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதி போர் களம் போல் காணப்பட்டது.
இதையும் படிங்க: பேஸ்புக்கில் பழக்கம்... ஒரு தலை காதல்... கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்