நியூயார்க்: கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் ஜோ பைடனுக்கு வழங்கும் விழாவில், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பயங்கர கலவரம் வெடித்தது. ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசி வீடியோக்களை தன் ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டார். சமூக வலைதளங்களில் வீடியோ வேகமாக பரவிய நிலையில், பொது அமைதியை கெடுக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்து வெளியிட்டதாக கூறி வீடியோக்கள் அகற்றப்பட்டு, டிரம்பின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ட்விட்டரை தன் வசப்படுத்திய டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், கருத்து சுதந்திரத்திற்கு தான் எப்போதும் ஆதரவளிப்பதாக கூறினார். இதையடுத்து ட்விட்டரில் மீண்டும் டிரம்பின் கணக்கை கொண்டு வருவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தினார். ஏறத்தாழ 15 மில்லியன் பேர் வாக்களித்ததாக கூறப்படுகிறது.
இதில் 51 புள்ளி 8 சதவீதம் பேர் டிரம்பின் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து எலான் மஸ்க் தன் ட்விட்டர் பக்கத்தின் மக்களின் குரல், கடவுளின் குரல் என லத்தீன் மொழியில் பதிவிட்டுள்ளார்.
இன்று தனது 80வது பிறந்த நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் ட்விட்டரில் முன்னாள் அதிபர் டிரம்பின் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது அனைவரையும் ஆதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
-
The people have spoken.
— Elon Musk (@elonmusk) November 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Trump will be reinstated.
Vox Populi, Vox Dei. https://t.co/jmkhFuyfkv
">The people have spoken.
— Elon Musk (@elonmusk) November 20, 2022
Trump will be reinstated.
Vox Populi, Vox Dei. https://t.co/jmkhFuyfkvThe people have spoken.
— Elon Musk (@elonmusk) November 20, 2022
Trump will be reinstated.
Vox Populi, Vox Dei. https://t.co/jmkhFuyfkv
கடந்த சில நாட்களுக்கு முன் 2024ஆம் அண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். தற்போது அவரது ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் 2 ஆண்டுகளுக்கு பின் நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது முதலே பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதையும் படிங்க: மொபைல் ஆப் சேலஞ்ச்: நாசா போட்டியில் தமிழக மாணவர்கள் முதலிடம்!