சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைத்தள நிறுவனத்தை வாங்க போவதாக மில்லியனர் எலான் மஸ்க் கடந்த ஏப்ரலில் அறிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கப்போவதாக தெரிவித்தார். இருப்பினும் சில நாட்களில் ட்விட்டர் அதன் கணக்குகள் குறித்த விவரங்களை தர மறுப்பதாக தெரிவித்து ட்விட்டர் வாங்குவதில் இருந்து பின் வாங்கினார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அந்நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை காட்டி ட்விட்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்-28 ஆம் தேதிக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இல்லையென்றால் சட்ட ரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டது.
-
Entering Twitter HQ – let that sink in! pic.twitter.com/D68z4K2wq7
— Elon Musk (@elonmusk) October 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Entering Twitter HQ – let that sink in! pic.twitter.com/D68z4K2wq7
— Elon Musk (@elonmusk) October 26, 2022Entering Twitter HQ – let that sink in! pic.twitter.com/D68z4K2wq7
— Elon Musk (@elonmusk) October 26, 2022
இந்நிலையில் தற்போது மொத்தமாக 54.20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளார் எலான் மஸ்க் . இதனையடுத்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமையகத்திற்கு கையில் கை கழுவும் சிங் தொட்டி ஒன்றை வைத்துக் கொண்டு சென்றார். அவர் ட்விட்டர் அலுவலகத்தில் நுழையும் வீடியோவை பகிர்ந்து, ‘ட்விட்டர் தலமையகத்திற்குள் நுழைந்து விட்டேன். இனி அது மூழ்கட்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:வாகனங்களில் விரைவில் இணைய வசதி..! எலான் மஸ்க்கின் புதிய திட்டம்..!