ETV Bharat / international

ஜானி டெப் மீது ஆம்பர் ஹெர்ட் வழக்கு: எலான் மஸ்க் கருத்து என்ன தெரியுமா? - இலான் மஸ்க்

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் மீது அவரது இரண்டாவது மனைவி ஆம்பர் ஹெர்ட் தொடர்ந்த வழக்கு குறித்து ஆம்பர் ஹெர்ட்டின் முன்னாள் காதலரும் ’டெஸ்லா’ நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

’அவர்கள் கடந்து செல்வார்கள் என நம்புகிறேன் ’ - அம்பேர் ஹெர்டின் முன்னாள் காதலர் இலான் மஸ்க்

author img

By

Published : May 29, 2022, 6:49 AM IST

வாஷிங்டன்: நாளுக்கு நாள், ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் மீது அவரது இரண்டாவது மனைவி வழக்கு தொடர்ந்து கொண்டே வருகிறார். சமீபத்தில், நீதிபதிகள் அவர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு குறித்து ஆலோசிக்க தொடங்குவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைவரும் ஆம்பர் ஹெர்ட்டின் முன்னாள் காதலருமான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், “அவர்கள் இதைக் கடந்து செல்வார்கள் என நம்புகிறேன். இருவரும் நம்ப முடியாதவர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க்கும் ஆம்பர் ஹெர்ட்டும் ஜானி டெப்பின் பிரிவிற்கு பிறகு சில காலம் காதல் உறவில் இருந்து வந்துள்ளனர். பிறகு ஒரு வருடம் கழித்து 2017இல் பிரிந்தனர். அதன் பின் மீண்டும் 2018இல் சேர்ந்த இந்த ஜோடியால் சில மாதம் கூட தாக்குப்பிடிக்கமுடியாமல் சுமூகமாகப் பிரிந்துவிட்டனர்.

  • I hope they both move on. At their best, they are each incredible.

    — Elon Musk (@elonmusk) May 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது ஒரு பக்கம் இருக்க, ஆம்பர் ஹெர்ட் திருமணமாகி ஒரு மாதத்திலேயே, அதாவது பிப்ரவரி 2015 இல் மஸ்க்குடன் உறவில் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நிலைகுலைந்த நித்தியானந்தா! இடது காலில் காயமாம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.