ETV Bharat / international

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தப்பி செல்ல முயன்ற 85 பேர் கைது

author img

By

Published : Sep 12, 2022, 12:45 PM IST

இலங்கை கிழக்கு கடற்பகுதியில் படகு மூலம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 80க்கும் மேற்பட்டவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharatஇலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தப்பி செல்ல முயன்ற 85 பேர் கடற்படையினரால் கைது

கொழும்பு : இலங்கை கடற்படையினரால் நேற்று (செப்-11) அதிகாலை மட்டக்களப்புக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்ற 85 பேரை கைது செய்தனர். இதில் 60 ஆண்கள், 14 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் சென்ற உள்ளூர் மீன்பிடி இழுவை படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் திருகோணமலை துறைமுக போலீஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். அதேவேளை, மொஹத்திவரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 85 நபர்களை படகு மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்த ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களாக கடல் வழியாக சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற பலரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த ஆண்டு ஜூன் மாதம், படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 100க்கும் மேற்பட்டோரை இரண்டு நாட்களில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கடற்படையில் பிடிக்கப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூன் 15 ஆம் தேதி, கிழக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​படகு மூலம் இடம்பெயர முயன்ற மேலும் 64 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. இது நாடு முழுவதும் உணவு, மருந்து, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. இதன் காரணமாகவே இலங்கை மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆசிய கோப்பை கிரிக்கெட் : 6 வது முறையாக கோப்பையை வென்றது இலங்கை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.