ETV Bharat / international

'நெருப்போடு விளையாடாதீர்கள்' - பைடனை எச்சரித்த சீன அதிபர் ஜி ஜின்பிங்! - சீன அதிபர் ஜி ஜின்பிங்

தைவான் குறித்து தொலைபேசி மூலம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக உரையாடியதாக கூறப்படுகிறது.

ஜோ பைடன்
ஜோ பைடன்
author img

By

Published : Jul 29, 2022, 3:24 PM IST

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்றதில் இருந்து 5ஆவது முறையாக சீன அதிபருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற இந்த உரையாடல் இரண்டு மணி நேரங்களுக்கும் மேல் நீடித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த உரையாடலின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சீனா மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் வளர்ச்சி பற்றி நீண்ட நேரம் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இருவரும் தைவானால் நிலவி வரும் பிரச்னைகள் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. தைவான் தன்னைத் தானே சுயமாக ஆட்சி செய்யும் நாடாக கூறி வருகிறது. தைவானுக்கு மறைமுகமாக அமெரிக்கா பல வழிகளில் உதவி செய்து வருகிறது. ஆனால், சீன அரசோ தைவான் சீனநாட்டைச்சேர்ந்த ஒரு பகுதியே ஆகும் எனக் கூறி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தைச்சேர்ந்த 'நான்சி பெலோசி', தைவானுக்குப் பயணம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டது. இந்தப்பயணத்திட்டமே தற்போதைய சீனாவின் அதிருப்திக்கு காரணமாகத் தெரிகிறது. இதுபோன்ற ஒரு பயணம் அச்சுறுத்தலாகவே கருதப்படும் என சீன அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டால் அதற்கேற்ற விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டி வரும் என சீன அரசு கடந்த புதன்கிழமை தெரிவித்தது.

தைவான் விவகாரம் பற்றி பைடனிடம் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், "நெருப்பை வைத்து விளையாடுபவர்கள் கையில் கண்டிப்பாக சூடு ஏற்படும். இதை அமெரிக்கா புரிந்துகொள்ளும் என நினைக்கிறேன்.

தைவான் விஷயத்தில் சீன அரசு மற்றும் மக்களின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. சீனாவின் 1.4 பில்லியன் மக்கள் சீனாவின் தேசிய இறையாண்மை மற்றும் ஒற்றுமையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: இந்தியப் பிரிவினையின்போது பிரிந்த சகோதரனை 75 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கவுள்ள பாகிஸ்தான் பெண்மணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.