ETV Bharat / international

ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கத்தில் 57 பேர் பலியானதாகத் தகவல்..!

Japan Earthquake: ஜப்பானில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 57 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

death toll in earthquake that struck Japan on New Year Day
ஜப்பான் நிலநடுக்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 11:53 AM IST

டோக்கியோ (ஜப்பான்): புத்தாண்டு தினத்தன்று திங்கட்கிழமை (ஜன.01) ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. திங்கட்கிழமை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 57 பேர் உயிரிழந்து உள்ளதாக ஜப்பான் அரசு ஊடகம் (NHK TV) தெரிவித்து உள்ளது.

ஜப்பானின் மேற்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இஷிகா மாகாணத்தின் நோடா தீபகற்பத்தில் அங்குள்ள உள்ளூர் நேரத்தின் படி மாலை 4:10 மணி அளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீண்டும் வலுவான நிலநடுக்கம் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை 24 மணி நேரத்திற்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டது. நேற்று (ஜன.02) நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சாலை வழியாக அணுக முடியாத அளவிற்குச் சாலை சேதமடைந்திருப்பதாகப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஜப்பான் ராணுவத்தினர் உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்ட போது, நிலநடுக்கத்தால் சேதமடைந்த வீடுகள் தீபற்றி எரிந்து கொண்டிருந்தன. வஜிமா நகரில் 25 வீடுகள் தீக்கிரையாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என கிஷிடா தெரிவித்தார்.

இந்நிலையில், நகரின் மையப்பகுதியான கவாய் (Kawai) பகுதியில் தீ எதுவும் பரவவில்லை எனவும், ஆனால் பிரபல சுற்றுலாத் தலமான ஆசைச்சி (Asaichi) பகுதியில் வீடுகள், கடைகள் என 200க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீக்கிரையானதாகக் கூறப்படுகிறது. ஜப்பான் நாட்டை அடிக்கடி நிலநடுக்கம் தாக்கும் நிலையில், புத்தாண்டு தினத்தில் நிலநடுக்கத்தால் பாதிப்பிற்கு உள்ளானது உலகமெங்கிலும் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும், ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் விவசாயமும், கடற்கரையை நம்பியும் மக்கள் வாழும் பகுதியான நோடா பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் நேற்று ஜப்பானில் விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதும் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: 3-0 என்ற கணக்கில் ஒரு நாள் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலிய அணி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.