மணிலா(பிலிப்பைன்ஸ்): 17 மாகாணங்களில் உள்ள 31,942 கிராமங்களில் 575,728 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மணிலா டைம்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக, புயலின் தாக்கத்தினால் பிலிப்பைன்ஸில் இருந்து 2,13,000-க்கும் அதிகமானோர் மையங்களில் தஞ்சமடைந்து உள்ளனர்.
இப்புயலினால் விவசாயத்துறையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மைமரொபா, பைகோல் ரீஜின், வெஸ்டர்ன் வியாசஸ் உள்ளிட்ட பகுதிகளில் 285.28 பெசோ மில்லியன் அளவிற்கு சேதம் ஏற்பட்டதோடு, இதனால் 11,761 மெட்ரிக் டன் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் அரிசி, மக்காசோளம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விளைச்சல் உட்பட மீன் வளர்ப்பு ஆகியவற்றிலும் பாதிப்பை கண்டுள்ளது.
புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு அரிசி, மக்காச்சோளம், மீனவர்களுக்கு மீன்குஞ்சுகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என அந்நாட்டின் டிஏ கூறியதாக மணிலா டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிலிப்பைன்ஸை உலுக்கிய ‘நால்கே’ புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ கடந்தது..