தோஹா: பிஃபா 22வது உலககோப்பை கால்பந்து இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவை நாளை இரவு சந்திக்கிறது. முன்னதாக இன்று இரவு கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் தொடங்கிய 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரைஇறுதியில் தோல்வி கண்ட குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதின.
பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் 7-வது நிமிடத்திலே குரேஷியா அணி வீரர் ஜோஸ்கோ வார்டியோல் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். இதற்கு பதிலடியாக மொரோக்கோ அணி வீரர் அஷ்ரப் டேரி ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.
தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் குரேஷியா அணி வீரர் மிஸ்லாவ் ஓர்சிக் தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதன்முலம் ஆட்டத்தின் முதல் பாதியில் குரேஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் எவ்வளவோ போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. பின்னர் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் கோல் எதுவும் அடிக்காததால் குரேஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணியை வீழ்த்தி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 3-வது இடத்தை பிடித்தது.
இதையும் படிங்க: ”அர்ஜென்டினாவுடன் மோதும் இறுதிப்போட்டி கடினமானதாக இருக்கும்” பிரான்ஸ் கேப்டன் லோரிஸ்