கொழும்பு: இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன உளவுக் கப்பலான யுவான் வாங் 5 நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த உளவுக் கப்பல் செயற்கைக்கோள்கள், நீர்மூழ்கி கப்பல்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கண்காணிக்கும் திறன் கொண்டது. இந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள நிலையில், ஆகஸ்ட் 11ஆம் தேதி யுவான் வாங் 5 கப்பலை நிறுத்த திட்டமிட்டது.
இந்த தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியதால், இந்திய அரசு அந்த சீன கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையின் அடிப்படையில், இலங்கை அரசு சீன வெளியுறவுத் துறையிடம் கப்பல் வருகையை ஒத்திவைக்குமாறு தெரிவித்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்த சீன வெளியுறவுத்துறை, இரு நாட்டின் கொள்கைகளில் மூன்றாம் நாடான இந்தியா தலையிடுவது முறையல்ல. அதேபோல ஒப்பந்தப்படி சீன கப்பல் இலங்கைக்கு வர முழு அதிகாரம் உள்ளது. இந்த விவகாத்தில் இந்தியா தலையிடமலிருப்பது நல்லது என்று தெரிவித்தது.
அதன் பின் இலங்கை அரசு உளவுக் கப்பல் வருகைக்கு அனுமதியளித்த நிலையில் நேற்று (ஆக 15) மாலை யுவான் வாங் 5 கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்ததடைந்தது. இந்த உளவுக் கப்பல் 2007ஆம் ஆண்டு சீனா கப்பல்படையில் இணைக்கப்பட்டது. சுமார் 11,000 டன் எடையை சுமக்கக்கூடியது.
இதையும் படிங்க: இந்தியா என்பது உண்மை மற்றும் அகிம்சை... அமெரிக்க அதிபர் ஜோ பைடன்...