பெய்ஜிங்: இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு இன்று (ஜூலை 26) பதவியேற்றார். இவருக்கு உலக அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் திரௌபதி முர்முவுக்கு தனது வாழ்த்தினை தெரிவிக்கொண்டார். இதுகுறித்து அவரது வாழ்த்து செய்தியில், "சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான நாடுகள். இருநாட்டின் மக்களை போலவே அரசுகளும் ஆரோக்கியமான, நிலையான உறவை கொண்டுள்ளன.
இரு நாடுகளும் வளர்ச்சிக்கும் மக்களின் நன்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதால், அரசியல் சார்பு, பொருளாதார ஒத்துழைப்பை சிறப்பாக உள்ளது. இதுபோல இருதரப்பு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்லும் நோக்குடன் குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள முர்முவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துகள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திரௌபதி முர்முவின் அதிகாரங்கள் என்னென்ன...?