இந்தோனேசியா: கம்போடியா பிரதமர் ஹன்சென், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியா சென்றிருந்தார். பாலியில் தங்கியிருந்த அவருக்கு நேற்று(நவ.15) கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள ஹன்சென், நேற்றிரவு கரோனா பரிசோதனை செய்ததாகவும், அதில் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொற்று உறுதியானதால், கம்போடியாவுக்கு திரும்புவதாகவும், ஜி20 மற்றும் APEC உச்சி மாநாட்டிலும் பங்கேற்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பாலியிலிருந்து புறப்பட்டார்.
அண்மையில் கம்போடியாவில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்ற ஆசியன் மாநாட்டில் ஹன்சென் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குடியுரிமை பெற்ற இந்தியர்கள் ராணுவத்தில் சேரலாம் - கனடா அறிவிப்பு