லண்டன்: உலகப்புகழ்பெற்ற கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை, பிரிமியர் லீக் கிளப் விற்கத் தயாராக இருந்தால், அதனை வாங்க ஆர்வம் உள்ளதாக பிரிட்டிஷ் கோடீஸ்வரரான ஜிம் ராட்க்ளிஃப் தெரிவித்துள்ளார்.
ரசாயன நிறுவனமான Ineos-ஐ வைத்திருக்கும் ராட்க்ளிஃப் ஒரு மான்செஸ்டர் யுனைடெட் ரசிகராக இந்த அணியை வாங்க முயற்சி எடுத்துள்ளார். முன்னதாக, கடந்த மே மாதம் மற்றொரு அணியான செல்சியாவை வாங்குவதற்காக முயற்சி எடுத்தார். ஆனால் அதில் தோல்வியடைந்தார்.
இதனைத்தொடர்ந்து தற்போது அவரது கவனத்தை ரெட் டெவில்ஸ் எனப்படும் மான்செஸ்டர் யுனைடெட் பக்கம் திருப்பியுள்ளார் என PA செய்தி நிறுவனத்தின் மூலம் தகவல் கிடைத்துள்ளது. சென்ற 2005ஆம் ஆண்டு முதல் கிளப்பை வைத்திருக்கும் கிளேசர் குடும்பம், கிளப்பில் உள்ள சிறு (Minority) பங்குகளை விற்பது குறித்து ஆலோசித்து வந்தது.
இது குறித்து ப்ளூம்பெர்க்கின் அறிக்கை கூறியதை அடுத்து இந்த செய்தி வெளிவந்தது. ராட்க்ளிஃப் சமீபத்தில் செல்சியா அணியை வாங்க முயன்றபோது, ரோமன் அப்ரமோவிச்சிடம் இருந்து டோட் போஹ்லி வெற்றி பெற்றதால் அவரது சலுகை நிராகரிக்கப்பட்டது.
மேலும் Ineosஇன் செய்தித் தொடர்பாளர், அணியை விற்கும் நோக்கம் நிறுவனத்திற்கு இருந்தால் அதன் சிறிய பங்குகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக கூறினார்.
இதனையடுத்து டைம்ஸ் இதழில் இனியோஸ் செய்தித்தொடர்பாளர் கூறியாதவது, "இது போன்ற விற்பனைக்கு ஏதாவது சாத்தியம் இருந்தால், நீண்ட கால உரிமையைப் பற்றி பேசுவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இது செலவழிக்கப்பட்ட அல்லது செலவழிக்கப்படாத பணத்தைப் பற்றி ஜிம் ராட்க்ளிஃப் எதிர்பார்க்கவில்லை எனவும், இப்போது என்ன செய்ய முடியும், கிளப் எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்து, அதனை மீட்டமைக்க நேரம் சரியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
" Ineos ஏற்கனவே பிரெஞ்சு லீக் -1 பக்கமான நைஸ் மற்றும் சுவிஸ் அணியை வைத்திருப்பதால், அதன் விளையாட்டு போர்ட்ஃபோலியோவை வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளது.
முன்னதாக டீம் ஸ்கையை ஆரம்பித்து இருந்த இனியோஸ் கிரெனேடியர்ஸ் சைக்கிள் ஓட்டுதல் அணிக்கும் நிதியுதவி செய்கிறது. மேலும் அதிக பிரபலம் இல்லாத கிளேசர்ஸ் அணி கடந்த ஒன்பது ஆண்டுகளாக பிரீமியர் லீக் பட்டத்தை வெல்லாமல் இருப்பதும், ஆடுகளத்தில் அதன் செயல்திறன் குறைந்து வருவதும், ஆகியவை யுனைடெட் அணி ரசிகர்களல் பெரிதும் விரும்பப்படுவதில்லை. இந்நிலையில் முன்னதாக கால்பந்து கிளப்பை வாங்குவது பற்றி எலோன் மஸ்க் கேலி செய்த அதே நாளில் இந்த செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை... ஃபிஃபா அதிரடி