பிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டை வழிநடத்துவார் என்று தங்களுக்கு நம்பிக்கையில்லை என கூறி, அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் பதவி விலகினர்.
அதைத்தொடர்ந்து ஓரிரு நாட்களில் அமைச்சர்கள், அரசு உயர்அதிகாரிகள் என ஏராளமானோர் ராஜினாமா செய்தனர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி அதிகரித்தது.
இதன் எதிரொலியாக பிரிட்டன் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி தேர்வு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த பிரதமருக்கான போட்டியில், முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ‘காளி பட போஸ்டரை நீக்குங்கள்’ - கனடாவுக்கு இந்திய தூதரகம் கோரிக்கை