அர்லிங்டன்: முன்னணி விமான உற்பத்தி நிறுவனமான போயிங் விமான நிறுவனத்தில், கடந்த 1983ஆம் ஆண்டு F/A-18 என்ற போர் விமானத்தை மெக்கனல் டக்லஸ் என்பவர் வடிவமைத்தார். இந்த போர் விமானத்தை போயின் நிறுவனம் 1997ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டது. இதனையடுத்து இந்த போர் விமானம் சர்வதேச சந்தையில் அதிக நுகர்வோரை ஈர்த்தது.
இதன் காரணமாக அமெரிக்க ராணுவம் உள்பட கனடா, பின்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதுவரை 2,000க்கும் மேற்பட்ட F/A-18 என்ற போர் விமானம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு கெடுபிடி இருந்த இந்த போர் விமானத்துக்கு ‘டாப் கன் விமானம்’ (Top Gun Plane) என்ற பெயரும் கிடைத்தது.
மேலும் இந்த பெயரால் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான Top Gun: Maverick என்ற திரைப்படத்திற்கு பெயர் வைக்கும் அளவிற்கு புகழ் பெற்றது. இருப்பினும், நவீன ரக போர் விமானங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றால் டாப் கன் ரக போர் விமானங்களுக்கான மவுசு கணிசமாக குறையத் தொடங்கியது.
இந்த நிலையில் வருகிற 2025ஆம் ஆண்டுக்குள் F/A-18 என்னும் டாப் கன் ரக போர் விமானங்களின் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக போயிங் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்கால ராணுவ பயன்பாடுகளுக்கு தேவைப்படும் அதிகளவிலான தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய போர் விமானங்களைத் தயாரிப்பதில் போயிங் நிறுவனம் முனைப்பு காட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்த போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு தயாராக இருந்தால், 2027ஆம் ஆண்டு வரை இதன் உற்பத்தி தொடரும் எனவும் போயிங் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், ‘நாங்கள் எதிர்காலத்துக்காக திட்டமிடுகிறோம். போர் விமானங்களை வடிவமைப்பது என்பது எங்களது மரபணுவிலேயே உள்ளது’ என போயிங் விமான நிறுவனத்தின் ஏர் டாமினன்ஸ் பிரிவின் துணைத் தலைவர் ஸ்டீவ் நோர்டுலுந்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சர்வதேச வழித்தடத்தில் பறக்க தயாராகும் ஏர் இந்தியாவின் முதல் போயிங் விமானம்...