வாஷிங்டன்: ஜி20 நாடுகளின் அமைப்பிற்கு தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியா, 18வது உச்சி மாநாட்டை திறம்பட நடத்தி முடித்ததற்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்து X தளத்தில் பதிவிட்டு உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்ட உதவும் வகையிலான நிலையான முடுக்கியாக திகழும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு விவகாரத்தில், உறுப்பு நாடுகளிடையே, கருத்தொற்றுமை ஏற்படுத்தியதற்காகவும், இந்தியாவிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்.
டிஜிட்டல் வகையிலான அடையாளம், கட்டணங்களை செலுத்துவதற்கான கட்டமைப்பு, தரவுகள் பரிமாற்றத் திறன் வாயிலாக, மக்களுக்கு அரசின் சேவைகளை, டிஜிட்டல் முறையில் வழங்கி, அவர்களை மட்டுமல்லது, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையே, இந்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அடிப்படையாகக் கொண்டு உள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த தரவுகள் வகையிலான இந்த அமைப்புகள், டிஜிட்டல் புரட்சியை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பவைகளாக உள்ளன. தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் வெற்றிகரமாக நடந்து முடிந்த ஜி 20 நாடுகளின் 18வது உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளால் நிறைவேற்றப்பட்ட டெல்லி ஜி20 பிரகடனத்தில், நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்தவும், சீரான, வலுவான வளர்ச்சியை ஊக்குவிக்கவும் கவனம் செலுத்தப்படுவதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மாற்றங்கள், தரவுகள் தொடர்பான முன்னேற்றங்கள் உள்ளிட்டவைகளும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏற்படும் வேற்றுமைகளை களைவதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்து உள்ளோம். பிளவுகளை நிவர்த்தி செய்வதற்கான அவசியத்தை நாங்கள் அங்கீகரிப்பதாக, டெல்லி ஜி20 பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆசிய உறுப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியா உட்பட 48 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் பொருளாதாரம் கடந்த 1997 முதல் 98ஆம் ஆண்டுகளில் நிதி நெருக்கடியில் சிக்கி வந்தது. இதை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு என்பது அனைத்து நாடுகளுக்கும் தேவை என்ற நோக்கத்திலும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டு முயற்சியால் கடந்த 1999ஆம் ஆண்டு ஜி20 நாடுகள் அமைப்பு உருவாக்க்கப்பட்டது.
தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், மிக நுட்பமான கலைத்திறன் உடன் அழகுற அமைக்கப்பட்டு இருந்த பாரத் மண்டபத்தில், கடந்த 9 மற்றும் 10ஆம் தேதிகளில், நடைபெற்ற ஜி 20 நாடுகளின் 18வது உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லி ஜி 20 பிரகடனம் விவகாரத்தில். உறுப்பு நாடுகளுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட்டு, அந்த பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியா முதல்முறையாக தலைமைப் பொறுப்பை ஏற்று, ஜி20 மாநாட்டை, வெற்றிகரமாக நடத்தி முடித்து உள்ளது. அடுத்த ஆண்டு, இந்த மாநாடு, பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!