ETV Bharat / international

Pakistan blast: மசூதியில் குண்டுவெடிப்புக்கு 32 பேர் பலி.. ஆப்கான் தற்கொலைப் படை தாக்குதல்! - pak blast

பாகிஸ்தானில் பெஷாவர் குண்டுவெடிப்பில் (Pakistan blast) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தாலிபான் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Pakistan blast
Pakistan blast
author img

By

Published : Jan 30, 2023, 5:57 PM IST

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் (Pakistan blast) 32 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பெஷாவர் நகரில் உள்ள பிரபல மசூதியில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதிய தொழுகை நேரத்தின்போது வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததாகவும், தற்கொலைப் படை தாக்குதல் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உணவுப் பஞ்சம், மின்வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, எரிவாயு பஞ்சம், பொருளாதாரம் சரிவு எனப் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு தற்போது கூடுதல் தலைவலியாக வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆப்கானிஸ்தானுடன் எல்லைப் பிரச்னை காரணமாக முட்டல் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானுக்கு அண்டை நகரமான பெஷாவரில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

மசூதியின் பெரிய சுவர் இடிந்து விழுந்த நிலையில், அதற்கடியில் பலர் சிக்கியிருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 32 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், 150 பேர் வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலின்போது சம்பவ இடத்தில் 260-க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாக உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது திட்டமிட்ட பயங்கரவாத தற்கொலை தாக்குதல் என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தாக்குதலில் படுகாயம் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வதாகவும், ஆழ்ந்த இரங்கல் என்றும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாட்டில் உளவுத்துறை செயல்பாடுகளை மேம்படுத்துவதும், அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட காவல்துறையை சரியான முறையில் தயார்படுத்துவதும் கட்டாயமாகும் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Murali vijay : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முரளி விஜய் ஓய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.