ETV Bharat / international

கேளிக்கை விடுதியிலிருந்து 20 பேரின் சடலங்கள் மீட்பு - இறப்புக்கான காரணம் என்ன?

கேளிக்கை விடுதியில் 20 பேர் சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dead
dead
author img

By

Published : Jun 26, 2022, 8:14 PM IST

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கேளிக்கை விடுதியில், இன்று(ஜூன் 26) அதிகாலையில் 20 பேர் சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தேர்வு முடிந்ததை கொண்டாடுவதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், உடற்கூராய்வு முடிவுகள் வந்ததும் காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கேளிக்கை விடுதியில் மேஜை, நாற்காலி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சடலங்கள் கிடந்ததாகவும், அவர்களது உடலில் காயங்கள் ஏதும் தென்படவில்லை என்றும் உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.