ETV Bharat / international

Brittney Griner: ரஷ்யாவுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் பாராட்டு! - ரஷ்யா

ரஷ்யாவில் உளவு பார்த்ததாக கடந்த 2018 ஆண்டு கைது செய்யப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் பவுல் வீலனை விடுதலை செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

ஆண்டனி பிளிங்கன்
ஆண்டனி பிளிங்கன்
author img

By

Published : Dec 9, 2022, 7:28 PM IST

வாஷிங்டன்: கைதிகள் பரிமாற்றம் முறையில் அமெரிக்கக் கூடைப் பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனரை ரஷ்யா விடுதலை செய்ததை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பாராட்டி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா சென்ற அமெரிக்கக் கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர் போதைப் பொருள் கடத்தியதாக ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ரஷ்யா உத்தரவிட்டது. இச்சம்பவம் உலகளவில் பெரிய பிரச்சினையைக் கிளப்பிய நிலையில், ரஷ்யாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாகப் பொருளாதாரத் தடைகளை விதித்ததால், கூடைப்பந்து வீராங்கனையைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி ரஷ்யா பழி தீர்ப்பதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் பிரச்சினையை முறையிடப் போவதாக அமெரிக்க தெரிவித்தது. இந்நிலையில், கைதிகள் பரிமாற்றம் மூலம் கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர் விடுவிக்கப்பட்டு உள்ளார். கைதிகள் பரிமாற்றத்தில் ரஷ்ய ஆயுத வியாபாரி விக்டர் பவுட் என்பவரை விடுவித்து பிரிட்னி கிரைனரை அமெரிக்கா மீட்டுள்ளது.

சுவீடன் வெளியுறவு அமைச்சர் டோபயஸ் பில்ஸ்ட்ராமுடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ஆண்டனி பிளிங்கன், விடுதலைக்குப் பின் கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர், முதல் முறையாக தன் கணவன் மற்றும் குடும்பத்தைப் பார்த்து மகிழ்ந்த சம்பவம் விவரிக்க முடியாத தருணம் என்றார்.

கூடைப்பந்து வீராங்கனை விடுதலைக்காக உழைத்த அமெரிக்க வெளியுறவு மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு நன்றி கூறிய பிளிங்கன் தவறான தகவல்கள் அடிப்படையில் வெளிநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அமெரிக்கரை மீட்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

அடுத்தகட்டமாக ரஷ்யாவில் உளவு பார்த்ததாகக் கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அமெரிக்கக் கடற்படை வீரர் பவுல் வீலன் என்பவரை விடுதலை செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் ஜூனியர் டிரம்ஸ் சிவமணி - டிரம்ஸ் வாசித்து கவரும் சிறுவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.