ETV Bharat / international

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் - 2 நாட்களில் நான்காவது முறை! - Another earthquake hit turkey

துருக்கியில் 2வது நாளாக நில நடுக்கம் ஏற்பட்டது. கடந்த இரு நாடகளில் நான்கு முறை துருக்கியை நிலநடுக்கம் புரட்டிப் போட்டுள்ளது.

துருக்கி
துருக்கி
author img

By

Published : Feb 7, 2023, 1:39 PM IST

துருக்கி: துருக்கியின் மத்திய பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 6 ஆக நிலநடுக்கம் பதிவானதாக மத்திய தரைக்கடல் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேற்று(பிப்.6) மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று(பிப்.06) முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மாலையில் மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. கடந்த இரு நாட்களில் மட்டும் துருக்கியில் 4 முறை நில அதிர்வு பதிவாகி உள்ளது. பூமி குலுங்கியதில் சீட்டு கட்டுகள் போல் கட்டடங்கள் இடிந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உயிரிழப்பு 5 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், தொடர் மீட்பு பணி நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர், மருத்துவக் குழுக்கள் அடங்கிய இந்தியக் குழு துருக்கி விரைந்துள்ளது.மறுபுறம் சிரியாவிலும் நில நடுக்கம் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளது. 12 ஆண்டுகளாக உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் சிரியாவிற்கு கூடுதல் தலைவலியாக நில நடுக்கம் அமைந்துள்ளது.

சிரியாவில் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல் துருக்கி, சிரியா அண்டை நாடான லெபனானில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. வரலாறு காணாத அளவில் லெபனானில் மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதானி விவகாரம்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு.. எதிர்கட்சிகள் தொடர் அமளி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.