ETV Bharat / international

Sundar pichai: சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கூகுள் சி இஓ சுந்தர் பிச்சை கடந்த 2022ஆம் ஆண்டில் 226 மில்லியன் டாலர் சம்பளமாகப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் வாயைப் பிளக்கும் சம்பளம்

author img

By

Published : Apr 22, 2023, 7:53 PM IST

கலிபோர்னியா: கலிபோர்னியா மாகாணத்தைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் Alphabet Inc என்ற தாய் நிறுவனத்தின் தேடு பொறியான கூகுள், AI செயற்கை நுண்ணறிவு உள்ள நிலையிலும், பல தரப்பட்ட மக்களால் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சையின் சம்பள விவரத்தை, கூகுள் நிறுவனமே வெளியிட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளது.

இதன் அடிப்படையில், கடந்த 2022ஆம் ஆண்டு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் சம்பளம் 226 மில்லியன் டாலர் ஆகும். இந்திய மதிப்பில் ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். இந்த ஊதிய விவரம் என்பது, கூகுளில் பணிபுரியும் இடைநிலை ஊழியரின் சம்பளத்தை விட 800 மடங்கு அதிகம் ஆகும் எனவும் தெரிய வந்துள்ளது.

இவற்றில் 218 மில்லியன் டாலர், நிறுவனத்தின் பங்கு. முன்னதாக கடந்த ஜனவரியில், பல்வேறு காரணங்களைக் காட்டி, 6 சதவீத ஊழியர்களை, அதாவது 12 ஆயிரம் ஊழியர்களை கூகுள் நிறுவனம் உலக அளவில் பணி நீக்கம் செய்தது.

அதேநேரம், இந்த மாத தொடக்கத்தில் அதிகபட்ச பணி நீக்கத்தால், கூகுளின் லண்டன் அலுவலகத்தில் ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல், கடந்த மார்ச் மாதத்தில் 200 ஊழியர்களுக்கும் அதிகமானோரைக் கூகுளின் ஜூரிச் அலுவலகத்திலிருந்து வெளியேற்றியதற்காக, இதர ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் சம்பள விவரம் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: இந்திய சேனல்களை பாகிஸ்தானில் ஒளிபரப்ப தடை - பெர்மா திடீர் நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.