ETV Bharat / international

இந்தியாவில் இருந்து 41 கனடா தூதர்கள் வெளியேற்றம் - கனடா வெளியுறவுத்துறை அமைச்சர்

41 Canada's diplomats removed from India: இந்தியாவில் இருந்து 41 கனடா தூதர்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டதை, கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலானி ஜோலி உறுதி செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Oct 20, 2023, 8:48 AM IST

டோர்னாட்டோ (கனடா): கனடாவின் வான்கோவருக்கு வெளியே உள்ள சர்ரே பகுதியில் கடந்த ஜூன் மாதம், 45 வயதான சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் முகமூடி அணிந்த நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்தியா உடந்தையாக இருந்ததாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ கடந்த மாதம் வெளிப்படையாகத் தெரிவித்தார். அப்போதில் இருந்து, இந்தியா - கனடா உறவில் சிக்கல் தொடங்கியது.

  • Amid India-Canada diplomatic tensions, Canadian Foreign Minister Melanie Joly says "As of now, I can confirm that India has formally conveyed its plan to unethically remove diplomatic immunities for all but 21 Canadian diplomats and dependents in Delhi by October 20. This means… pic.twitter.com/tbqwk9Wv8u

    — ANI (@ANI) October 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதிலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இந்தியாவில் பிறந்து கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற நிஜ்ஜார், பயங்கரவாத தொடர்புடையவர் என இந்தியா கூறியது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள கனடா தூதர்களை குறைப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார். இதன் அடிப்படையில், இந்தியாவில் உள்ள 62 கனடா தூதர்களில், 41 பேரை குடும்பத்துடன் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டதாகத் தெரிகிறது.

இதனை, கனடா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெலானி ஜோலி உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “கனடா நாட்டின் 41 தூதர்கள் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனினும், 21 கனடா தூதர்கள் இந்தியாவிலே உள்ளனர். கனடா தூதர்களின் அந்தஸ்தை நீக்குவது சர்வதேசச் சட்டத்திற்கு முரணானது. இருப்பினும், கனடா இதற்கு பதிலடி கொடுக்காது” என தெரிவித்து உள்ளார். இதனால், இன்று கனடா நாட்டின் தூதர் அந்தஸ்தை இழந்த 41 பேரும், தங்களது குடும்பத்தாருடன் சொந்த நாட்டிற்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: இஸ்ரேல் - பாலஸ்தீனிய போர் எதிரொலி: சிறுவன் கொலை; பெண் படுகாயம்.. வீட்டு உரிமையாளர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.