ETV Bharat / international

பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 19 பேர் உயிரிழப்பு - pakistan bus accident 19 killed

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர்.

19-killed-as-bus-falls-into-ravine-in-southwest-pakistan

author img

By

Published : Jul 3, 2022, 2:33 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்து குவெட்டா நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து சோப் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில், "சோப் மலைப்பாதையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்களில் 5 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படோருக்கு அனைத்து விதமான மருத்துவ உதவிகளையும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான சாலை கட்டமைப்பு, போக்குவரத்து விதி மீறல், மோசமாக பராமரிக்கப்படும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாகிஸ்தானில் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகிவருகிறது. கடந்த மாதம், வடக்கு பலுசிஸ்தானின் கிலா சைபுல்லாவில் பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உள்பட 22 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் கண்டெய்னர் லாரிக்குள் 46 உடல்கள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.