ETV Bharat / international

மியான்மரில் பள்ளி மீது ராணுவத்தினர் தாக்குதல் - 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி! - பள்ளி மீது ராணுவ ஹெலிகாப்டர் தாக்குதல்

மியான்மரில் பள்ளி மீது ராணுவப் படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

killed
killed
author img

By

Published : Sep 20, 2022, 2:13 PM IST

மியான்மர்: மியான்மரில் மத்திய சகாயிங் பிராந்தியத்தில் கடந்த 16ஆம் தேதி, லெட் யெட் கோன் கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.

அந்த பள்ளி புத்த மடாலயத்தில் இருப்பதாகவும், அங்கு கிளர்ச்சியாளர்கள் தங்கியிருந்த காரணத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி, மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பிறகு ராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்களை ஒடுக்க பல்வேறு மோசமான நடவடிக்கைகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ராணுவ ஆட்சி அமைந்த பிறகு, குறைந்தபட்சம் 1,600 பொதுமக்களை ராணுவத்தினர் கொன்றதாகவும், 12,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க: உணவு ஆர்டர் செய்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த ஊழியர்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.