தென்மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஏமனில் சவுதி தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் ஆதரவு பெற்ற ஆட்சி நடைபெற்றுவருகிறது. இங்கு ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிப் படை அரசுக்கு எதிராக தொடர்ந்து கலகத்தில் ஈடுபட்டுவருகின்றது.
ஹவுதி கிளர்ச்சிப் படை அந்நாட்டின் ஏடன் மாகாணத்திலுள்ள பாதுகாப்புப் படை முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில், புதிதாக பாதுகாப்புப் படையில் சேர்ந்த 36 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், மேலும் 13 வீரர்கள் தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிரிழந்திருப்பது அந்நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
ஹவுதி கிளர்ச்சிப் படை நடத்திய தாக்குதலில், இதுவரை 48 பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இது குறித்து அந்நாட்டு உள் துறை அமைச்சகம் , இரண்டாவது முறையாக பாதுகாப்புப் படை முகாமில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் குறித்து இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று கூறியுள்ளது.