ETV Bharat / international

சென்னையை விட 10 மடங்கு பெரிய பனிப்பாறை உடைந்தது!

அண்டார்டிகாவில் ஏ-76 எனப் பெயரிடப்பட்டுள்ள ராட்சத பனிப்பாறை ஒன்று தனியாகப் பிரிந்து கடலில் மிதந்து வருகிறது.

iceberg
ராட்சத பனிப்பாறை
author img

By

Published : May 21, 2021, 10:02 AM IST

Updated : May 21, 2021, 12:34 PM IST

உலகளவில் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. பல இடங்களில் பனிப்பாறைகள் உருகி வருகின்றது. இதன் விளைவாக, கடல் மட்டம் உயர்ந்து பல கடற்கரையோரப் பகுதிகள் நீரினுள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அப்படி ஒரு சம்பவம் தான், பூமியின் தென் பகுதியில் உள்ள மிகப்பெரிய அண்டார்டிகாவில் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. சுமார் 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ராட்சத பனிப்பாறை, தனியாகப் பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது.

largest iceberg
உடைந்த ராட்சத பனிப்பாறை

175 கி.மீ. நீளமும், 25 கி.மீ. அகலமும் கொண்ட இந்தப் பனிப்பாறைக்கு ஏ-76 எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் பனிப்பாறை இன்னும் சில நாட்களில் சிறு சிறு துண்டுகளாக உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது கடலில் மூழ்கும் பட்சத்தில், கடல் மட்டம் உயர்ந்து பல நகரங்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த வருடம் இதேபோல் பெரிய பனிப்பாறையான A-68A உடைந்து நொறுங்கி கடலில் விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : May 21, 2021, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.