சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்ததில் இருந்தது, அப்பகுதியை கட்டுபாட்டில் வைத்துள்ள குர்து பேராளிகளின் மீது துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கும் அமெரிக்காவுடன் தோலோடு தோல் நின்று பேராடிய குர்து பேராளிகளை பயங்கரவாதிகள் என்று துருக்கி கருதுவதே இந்த தாக்குதலுக்கு காரணம்.
இதனிடையே, துருக்கிக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, அதிபர் டயீப் எர்டோகனை சந்தித்து 120 மணி நேரம் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டுகோள் விடுத்தார். இதன்மூலம், இடைப்பட்ட (போர் நிறுத்த) காலத்தில் சிரியாவில் துருக்கியின் காட்டுபாடில் உள்ள 30 கி.மீ. பரப்பளவு கொண்ட பகுதியைவிட்டு குர்துகள் வெளியேறுவார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்த போரின் இடைக்கால நிறுத்தம் வரும் செவ்வாய்கிழமை இரவுடன் முடிவடைவுள்ள நிலையில் அதுகுறித்து பேசிய அதிபர் எர்டோகன், "இன்று போர் நிறுத்தத்தின் இரண்டாவது நாள். வரும் செவ்வாய்கிழமையுடன் இது நிறைவடைகிறது. அதற்குள் குர்துகள் ஒப்புக்கொண்டபடி துருக்கி கட்டுபாட்டில் உள்ள பகுதிகளை விட்டு வெளியேறாவிட்டால் அவர்களின் தலைகளை நசுக்கிவிடுவோம்" என மிரட்டும் பாணியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குர்துகள் மீது துருக்கி மேற்கொண்டு வரும் தாக்குலுக்கு இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் என பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துளன.
இதையும் வாசிங்க: சிரியாவில் திடீர் திருப்பம், சிரிய உள்நாட்டுப் போர் பின்னணி!