ETV Bharat / international

அமெரிக்கா - ஈரான் பதற்றமும், இந்தியாவும்! - US - Iran war tensions

அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் உருவாகியுள்ள நிலையில் இவ்விவகாரத்தால் இந்தியாவில் ஏற்படும் தாக்கம் குறித்து முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி ஜே.கே. திரிபாதி எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

US - Iran
US - Iran
author img

By

Published : Jan 7, 2020, 12:08 AM IST

இந்தப் புத்தாண்டு, மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்தவாறே தொடங்கியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே ஒபாமா ஆட்சி காலத்தில் கையெழுத்திடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக, தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2018ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்ததில் இருந்து, இரு நாடுகளுக்கு இடையே போட்டி நிலைப்பாடு வளர்ந்து, தற்போது அது முழுமையான போரை நோக்கி செல்லும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

பாக்தாத் விமான நிலையத்திற்கு அருகே அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் ஐ.ஆர்.ஜி.சி (இஸ்லாமிய புரட்சிகர காவல் படை) தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சுலைமாணி மற்றும் கிளர்ச்சிப் படைத்தளபதி அபு முஹாதி அல் முஹாந்தீஸ் ஆகியோரின் மரணம், இந்த பதற்றத்திற்கான உடனடி காரணமாகி விட்டது. தங்களது இராணுவத்தலைவர்களின் மரணத்திற்கு பழிக்குப்பழி வாங்கப்படும் என்று ஈரானிய படைகள் உறுதி பூண்டுள்ளன. மறுபுறம், ஈரானுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்குவோம் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

1979இல் ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் நிலவி வந்தது. இது அமெரிக்காவின் தீவிர நட்பு நாடான ஷா ரெசா பெஹெல்வியின் அரசை கவிழ்ப்பதில் முடிந்தது. இதையடுத்து, அமெரிக்கா உடனடியாக ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்டது. அதன் பின்னர் ஈரானில் உள்ள அமெரிக்க நலன்கள், தெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தால் பாதுகாக்கப்படுகின்றன. மோசமடைந்து வரும் உறவுகள் 1995ஆம் ஆண்டில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வர்த்தகத் தடையை விதித்தபோது மேலும் மோசமடைந்தது.

சவுதி அரேபியாவின் (அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு) தலைமையின் கீழ் உள்ள பெரும்பாலான சன்னி ஜி.சி.சி நாடுகள் எண்ணெய் - வளமான ஈரான் பிராந்தியத்தில் போட்டியிட விரும்பவில்லை என்பது உறவுகளை வளர்ப்பதற்கு மற்றொரு சாத்தியமான காரணம். அந்நேரத்தில் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக அமெரிக்கா இருந்தது; சவுதி அரேபியா, அமெரிக்காவின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இருப்பதால், ஈரானைத் தக்க வைத்துக் கொள்ள ஆதிக்கம் செலுத்தும் யூத வணிக லாபிக்கு இது பொருத்தமானது.

இருப்பினும், 2015இல் பராக் ஒபாமா ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது ஈரானை அதன் அணு எரிபொருள் உற்பத்தி மற்றும் செயலாக்க வசதிகளை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று, சர்வதேச அணுசக்தி ஆணையம் நிர்பந்தப்படுத்தியது.

அதேநேரம் ஈரான் தனது கடமைகளை சரியாக நிறைவேற்றுகிறது என, அமெரிக்க அதிபர் அவ்வப்போது சான்றளிக்க வேண்டும். எனினும், ஏறத்தாழ ஒரு வருடம் சான்றிதழ் அளித்த பின்னர், இந்த "பேரழிவு தரும்" மற்றும் "என்றென்றும் மோசமான ஒப்பந்தத்தை" முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் தனது தேர்தல் பரப்புரையின்போது சபதம் செய்த ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் கடும் விமர்சனங்களை மீறி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகினார்.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அளித்த தகவல்களின் அடிப்படையில், ஈரான் இந்த ஒப்பந்தத்தின் கீழ் அதன் உறுதிப்பாட்டில் இருந்து ரகசியமாக பின்வாங்கியதாக நம்பகமான உள்ளீடுகள் இருந்த காரணத்தால், அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

ஈரான் இதற்கு எதிர்வினையாற்றவே பல்வேறு பின்விளைவுகளை உருவாக்கியது. இப்போது ஈரானிடம் இருந்து அந்த பிராந்தியத்தைப் பாதுகாப்பதாகக்கூறி, வளைகுடாவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உள்ளனர்.

தற்போதைய பதற்றம் ஒரு போருக்கான வாய்ப்பை அதிகரித்தால், வளைகுடாவின் நிலைமை இந்தியாவை எவ்வாறு பாதிக்கும் என்பது தற்போது தெரியவில்லை. அமெரிக்கா இன்னும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேற இயலவில்லை. அத்துடன் வட கொரியாவுடனான அணுசக்தி பிரச்னை, சீனாவுடனான வர்த்தக பிரச்னைகளைத் தீர்க்க முடியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா ஒரு புதிய பிரச்னையை உருவாக்க விரும்பாது.

மேலும், போர் நடந்தால் வளைகுடாவில் இருந்து எண்ணெயின் உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டேங்கர்களின் இயக்கம் பாதிக்கப்படும். இதன் விளைவாக எண்ணெய் விலை கடுமையாக உயரும். போர் ஏற்படாமலேயே எண்ணெய் விலை ஏற்றம் ஆரம்பமாகிவிட்டது. இத்தகைய சுழல் விளைவால் நமது பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். வளைகுடாவில் பணிபுரியும் சுமார் நான்கு மில்லியன் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்; அவர்கள் மூலம் கிடைக்கு அந்நிய செலாவணி பணத் தொகை பாதிக்கப்படும். அத்தகைய தொழிலாளர்கள் அதிகளவில் நாடு திரும்பும் பட்சத்தில் தற்போதைய மோசமான பொருளாதாரத்திற்கும் மேலும் சுமையாகக்கூடும்.

இத்தகைய பயங்கரமான சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டவையாக உள்ளன. ஒரு சார்பாக நிற்காமல் ஒரு இணக்கமான தீர்வுக்காக நாம் பணியாற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இரு தரப்பினரையும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய எட்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றாலும், பதற்றத்தைத் தணிப்பதில் தீவிரமாக ஈடுபடுவதற்கு மற்றவர்களை விட இந்தியாவிற்கு ஒரு சிறந்த நிலை உள்ளது.

அமெரிக்காவுடன் நமக்கு யுக்தி சார்ந்த உறவுகள் மற்றும் ஈரானுடனான நாகரிக உறவுகள் உள்ளன. பிரதமர் மோடியின் சர்வதேச அந்தஸ்திலும் அனுபவமுள்ள மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ராஜதந்திரி எஸ். ஜெய்சங்கர் (சமீபத்தில் ஈரானுக்கு விஜயம் செய்தவர்) வெளி விவகார அமைச்சராக இருப்பதாலும், நமது பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்காக நாம் மத்தியஸ்தப் பணிகளை அதிகம் முயற்சிக்க வேண்டிய தருணம் இது. நம்முடன் உடன்படவில்லை என்றாலும், இரு தரப்பினரும் பெரும்பாலும் நாம் கூறுவதைக் கேட்பார்கள்.

அதேசமயம், கச்சா எண்ணெய் தடையில்லாமல் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய, பிற சாத்தியமான வாய்ப்புகளையும் நாம் ஆராய வேண்டும். மற்றொரு பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான வெனிசுலாவும் அமெரிக்கத்தடைகளின் கீழ் இருந்தாலும், நைஜீரியா, பிரேசில் அல்லது அங்கோலாவில் இருந்து கூட நம் இறக்குமதி அதிகரிப்பதற்கான சாத்தியத்தை ஆராயலாம்.

மத்திய கிழக்கின் நிலைமையால் ஏற்படும் மோசமான தாக்கத்தை ஓரளவுக்குத் தணிக்க, சூரிய மின்சக்தி உற்பத்தியை விரைவாக அதிகரித்தல் மற்றும் எண்ணெய்க்கு மாற்றானதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம்.

Intro:Body:

US-Iran standoff and India

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.