சிரியா நாட்டு படைகள், அமெரிக்க படைகளின் உதவியுடன் குர்திஷ் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்பின் மீது கடந்த சில மாதங்களாக தாக்குதல்கள் நடத்தி வருகின்றனது. சில நாட்களுக்கு முன் பெரிய எல்லை பரப்பை கொண்டிருந்த ஐ.எஸ் அமைப்பு, தொடர் தாக்குதல்களால் படிப்படியாக பின் வாங்கி இன்று சிரியா, ஈரான் எல்லையில் சிறிய பகுதியை மட்டுமே தக்க வைத்துள்ளது.
இந்நிலையில் இன்று ஐ.எஸ் மீதான கடைசிக் கட்ட தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது நடந்து வரும் தாக்குதலில் மிகவும் தேர்ந்த போராளிகள் மட்டுமே எஞ்சி இருப்பதால் தாக்குதல் கடுமையாக இருக்குமென சிரியா படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், முறையான அறிவிப்பு வெளியாக சில காலம் ஆகலாம் என்றும் அடுத்த வாரம் கலிபாக்கள் முழுமையாக அழிக்கப்பட்ட தகவல் வெளியாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.