ETV Bharat / international

'ஹவுத்திகளின் போர் நிறுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது' - ஐநா - houti announces seize fire

சவுதி அரபியா மீது தற்போது தாக்குதல் நடத்தமாட்டோம் என ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என ஏமனுக்கான சிறப்பு ஐநா தூதர் மார்டின் கிரிஃபித்ஸ் (Martin Griffiths) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

martin griffiths
author img

By

Published : Sep 22, 2019, 4:14 PM IST

மத்திய கிழக்கு நாடான ஏமனின், ஹவுத்தி(Houti) கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்றதுவருகிறது.

ஆயிரக்கணக்கானோர் பலியாவதற்கு காரணமான இந்தப் போரில், ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வருகின்றன.

இந்நிலையில், சவுதி மீதான தங்களது தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தவைப்பதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஏமனுக்கான சிறப்பு ஐநா தூதர் மார்டின் கிரிஃபித்ஸ், "சவுதியைத் தாக்கமாட்டோம் என ஹவுத்திகள் அறிவித்துள்ளனர். இது பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போருக்கு முடிவை கொண்டுவரலாம்" என்றார்.

சவுதி அரசின் அராம்கோ எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் வயல், எண்ணெய் மீது கடந்த வாரம் ஆளில்லா விமான மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. சவுதியின் எண்ணெய் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

ஆனால், சவுதி, அமெரிக்க அரசுகளோ சவுதி எண்ணெய் தாக்குதலுக்கு ஈரான் அரசுதான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளன. இந்த சூழலில்தான், ஹவுத்திகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இது மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகளில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் பதற்றத்தை சற்று தணிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.