ஜெருசலேம்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த மாதம் 10 நாள்களுக்கும் மேலாக நடந்துவந்த போரில், சுமார் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்தனர்.
இந்தப் போருக்குப் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதனைத்தொடர்து கடந்த மே 21ஆம் தேதி போர் நிறுத்தத்திற்கான உடன்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு காசா பகுதியில் இஸ்ரேல் நேற்று மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
காசாவில் மீண்டும் தாக்குதல்
பாலஸ்தீன பகுதியிலிருந்து தெற்கு இஸ்ரேல் பகுதிக்கு நேற்று முன்தினம் நெருப்பு பலூன் அனுப்பப்பட்டதாகவும், இதனால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பற்றியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து காசாவில் இஸ்ரேல் ராணுவம் இரண்டுமுறை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மீண்டும் போர் ஏழும் இடரை ஏற்படுத்தியுள்ளது.
மே 21ஆம் தேதிக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல்
இஸ்ரேலில் புதிய அரசு பதவியேற்ற சில நாள்களில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது. மே 21ஆம் தேதிக்குப் பிறகு இஸ்ரேலால் நடத்தப்பட்ட பெரிய தாக்குதல் இதுவாகும்.
இது குறித்து பேசிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய சுதந்திர இயக்கமான ஹமாஸுக்கும் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இருதரப்பும் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: எடைகுறைந்த கிம் ஜாங் உன் : உடல் நலக்குறைவா? டயட்டா?