வடக்கு ஈராக்கில் பயங்கரவாத தளங்களை பராமரிக்கும் சட்டவிரோத குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்கு (பி.கே.கே.) எதிராக துருக்கி அடிக்கடி வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது.
'ஆபரேஷன் க்ளா-ஈகிள்' என்ற பெயரில் ஈராக்கின் வடக்கில் சிஞ்சர் உள்பட பல பிராந்தியங்களில் சந்தேகத்திற்கிடமான பி.கே.கே. இலக்குகளைத் துருக்கி தாக்கியுள்ளது. இதுதொடர்பாக, தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள துருக்கி ராணுவம், பயங்காரவாதிகளின் தங்குமிடங்கள், குகைகள் உள்பட பிகேகேவுக்கு சொந்தமான 81 இடங்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஜெட் விமானங்கள் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து விளைவிக்காமல் பாதுகாப்பாக தங்கள் தளங்களுக்கு திரும்பியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தென்கிழக்கு துருக்கியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கிளர்ச்சியை நடத்திவரும் பிகேகேவிடமிருந்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.