கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாட்டுகளால் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இச்சமயத்தில் தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கரோனா நடவடிக்கைகள் என்ற பெயரில் ஊழல் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக, கடந்த சில நாள்களாகப் பல பகுதிகளில் இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற நிலையில், நேற்று(ஜூலை 14) பிரதமரின் இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்நாட்டின் பிரதமரை ’நீங்கள் ப்ரைம் மினிஸ்டர் அல்ல; கிரைம் மினிஸ்டர்' என விமர்சித்து முழக்கமிட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், காவலர்கள் கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.