மத்திய கிழக்கு நாடான சிரியாவின் அதிபர் பஷர் அசாத் அவரது மனைவி அஸ்மா ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருவருக்கும் கரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் தென்பட்டதால், பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன் முடிவில், கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இருவரும் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிலிருந்தபடியே பணிகளைச் செய்வார்கள் என அதிபர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிரியாவில் இதுவரை 16 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 63 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில்தான், சிரியாவில் கரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், எத்தனை பேருக்கு தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: '65 கோடி சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே திருமணம் '